ஐந்து வருட காலமாக செலுத்தமுடியாதுபோன உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கு உர வகைகளை கடனுக்கு பெற்றுள்ள நிலையில் விவசாய அமைச்சு, தனியார் துறையினருக்கு 23,000 மில்லியன் ரூபாவை செலுத்தவேண்டியிருந்தது. அதில் 93% தற்போது செலுத்தப்பட்டுவிட்டதாகவும், தற்போது 5,000 மில்லியன் ரூபாவே நிலுவையாகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீதமான அந்த தொகையை வழங்குவதற்கு நிலவும் சட்ட ரீதியான சிக்கல்களை நிறைவுசெய்து விரைவாக அதனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)