மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (11) அதிகாலை 1.25 மணியளவில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள, வர்த்தக நிலையமொன்றிற்குள் கொள்ளையடிக்க வந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, காசாளரான பெண் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் 23 வயதான பெண் ஒருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.