முதல் முறையாக உலக வெப்பநிலை ஆண்டு முழுவதும் 1.5 செல்சியஸை விஞ்சி இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலைநிலை சேவை தெரிவித்துள்ளது.
உலக வெப்பநிலை 1.5 செல்சியஸுக்குள் வைத்திருக்க உலகத் தலைவர்கள் கடந்த 2015இல் வாக்குறுதி அளித்தனர். இந்த வரம்பு பாதகமான பாதிப்புகளை தவிர்க்க தீர்க்கமானதாக கருதப்படுகிறது.
காலநிலை மாற்றத்தால் 2023 இல் புயல்கள், வரட்சி மற்றும் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்திருந்ததோடு, எல் நினோ நிகழ்வும் அதிகரித்திருந்தது. இது கடந்த 100,000 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டாக பதிவாகும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
“நாம் 1.5 செல்சியஸை தொட்டிருப்பதோடு நாம் இழப்புகளை, சமூக இழப்புகளை மற்றும் பொருளாதார இழப்புகளை காண்கிறோம்” என்று காலநிலை பாதிப்பு ஆய்வுக்கான போஸ்ட்டம் நிறுவனத்தின் ஜோன் ரொக்ட்ரோம் தெரிவித்துள்ளார். 1.5 செல்சியஸுக்கு மேற்படாது, தொழில்துறைக்கு முந்திய நிலைக்கு உலக வெப்பநிலையை மட்டுப்படுத்துவது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான சர்வதேச முயற்சியாக உள்ளது.