Tuesday, May 14, 2024
Home » ஊழிநாள் கடிகாரத்தில் நள்ளிரவுக்கு 90 விநாடி

ஊழிநாள் கடிகாரத்தில் நள்ளிரவுக்கு 90 விநாடி

by Gayan Abeykoon
January 25, 2024 6:14 pm 0 comment

உலகம் அணு ஆயுத பேரழிவு ஒன்றை நெருங்குவதை அடையாளப்படுத்தும் ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு 90 விநாடிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழிநாள் கடிகாரம் முன்னேப்போதும் இல்லாத அளவு நள்ளிரவை நெருங்கியபோதும் அதனை தொடர்ந்து முன்னகர்த்துவதை விஞ்ஞானிகள் தவிர்த்துள்ளனர்.

அணு ஆயுதப் போட்டி, உக்ரைன், காசா போர் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய கவலைகளுக்கு மத்தியிலேயே இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு நெருக்கமாக தக்கவைக்கப்பட்டுள்ளது.

அணு விஞ்ஞானிகளின் வெளியீடு என்ற அமைப்பினால் இந்த ஊழிநாள் கடிகாரம் வருடாந்தம் நகர்த்தப்படுகிறது.

எனினும் 2007 தொடக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட புதிய அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போர் போன்று பெரும் அச்சுறுத்தல் கொண்டவை என்று இந்த அமைப்பு கருதுகிறது.

இந்த கடிகாரத்தின் புதிய மாற்றம் பற்றி செவ்வாய்க்கிழமை (23) அறிவிக்கப்பட்டதோடு, தவறு அல்லது தவறான மதிப்பீடு மூலம் அணு ஆயுதப் போர் ஒன்று ஏற்படுவதற்காக ஆபத்து இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT