Friday, November 1, 2024
Home » அமெரிக்காவில் பனிப்புயல்: 90க்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவில் பனிப்புயல்: 90க்கும் மேற்பட்டோர் பலி

by gayan
January 23, 2024 9:41 am 0 comment

அமெரிக்காவில் கடந்த வாரம் முழுதும் வீசிய பனிப் புயலில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டென்னசீ, ஒரேகன் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த மரணங்கள் பதிவாகின. கடுமையான பனிப்புயல் காரணமாக அந்த மாநிலங்களில் நெருக்கடிநிலை இன்னமும் நடப்பில் உள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த வாரமும் பனிப்புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டென்னசீயில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குழாய்கள் உடைந்துவிட்டதால் அந்த மாநிலத்தில் வசிக்கும் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் தண்ணீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்தும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

குடிக்க, பல் துலக்க, பாத்திரங்களைக் கழுவ, உணவு சமைக்க என அனைத்துக்கும் கொதிக்கவைத்த நீர் பயன்படுத்தப்படுகிறது.

சில உணவகங்களும் உணவு விடுதிகளும் போத்தல் தண்ணீரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுகின்றன. வேறுவழியில்லாத உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மழையால் அமெரிக்காவின் மத்திய, வடகிழக்குப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x