Thursday, May 16, 2024
Home » இறப்பர் தோட்டங்களில் ஒருவகை பூஞ்சை நோய்
இரத்தினபுரி மாவட்ட

இறப்பர் தோட்டங்களில் ஒருவகை பூஞ்சை நோய்

by Gayan Abeykoon
January 17, 2024 6:06 am 0 comment

இரத்தினபுரி மாவட்டத்தில் அண்மையில் நிலவிய காலநிலை மாற்றத்தை தொடர்ந்து இறப்பர் தோட்டங்களில் ஒரு வகையான பூஞ்சை நோய் பரவி வருவதாக, இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரத்தினபுரி மாவட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறப்பர் மரங்களின் இலைகளில் ஏற்படுகின்ற பூஞ்சையாலேயே இந்த நோய் பரவி வருவதாகவும், அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும் போது, இறப்பர் மரங்களுக்கு போதியளவான ஒளி கிடைக்காமையால், இந்த பூஞ்சை நோய் பரவி வருவதாக தெரியவந்துள்ளது. கீழ்நாட்டு ஈரவலயத்தில் இறப்பர் செய்கையில் பீடித்துள்ள இந்த நோய் சகல பிரதேசங்களிலுமுள்ள இறப்பர் மரங்களில் பரவி வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்

இறப்பர் தோட்டங்களில் இந்த பூஞ்சை நோய் காணப்படும் பட்சத்தில் உடனடியாக இறப்பர் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளை சந்தித்து தேவையான உரிய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும், இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரத்தினபுரி மாவட்ட அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT