Home » தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எதிர்பார்ப்புகள் பிறக்க வேண்டும்

தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எதிர்பார்ப்புகள் பிறக்க வேண்டும்

- ஆளுநர் செந்தில் தொண்டமான் தைப்பொங்கல் வாழ்த்து

by damith
January 15, 2024 9:45 am 0 comment

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இலங்கைவாழ் தமிழர்கள் மற்றும் உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கலை இன்று கொண்டாடுகின்றனர். தமிழர்களுக்கு தை பொங்கல் பண்டிகை புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாளாகவும் பொங்கல் திகழ்கிறது.

சூரியனுக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்த கொண்டாடப்படுகின்ற இந்த தைப்பொங்கல் நன்நாளில் அனைவரும் அன்பு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை மற்றும் பிறருக்கு உதவி செய்யும் நற்பண்புகளை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தை பொங்கல் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அனைத்து உயிர்களும் சமம் என்பதையும் போதிக்கிறது. தை பொங்கலுடன் தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எதிர்பார்ப்புகள் பிறக்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.” எனவும் தனது வாழ்த்துச் செய்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

சுபீட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்த நம்பிக்கையை ஏற்படுத்தட்டும்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளமான புத்தாண்டின் விடியல்

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் சிறந்த நாள்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT