Sunday, May 19, 2024
Home » 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஐம்பதாவது நினைவேந்தல் நிகழ்வு

1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஐம்பதாவது நினைவேந்தல் நிகழ்வு

by gayan
January 11, 2024 7:50 am 0 comment

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம்

முற்றவெளியில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

1974 ஜனவரி மாதம் 03 தொடக்கம் 10 வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில், பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், மின்சார கம்பி பொதுமக்களின் கூட்டத்தில் அறுந்து விழுந்ததில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல், சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசாங்கம் பல தடைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட, யாழ் குறூப் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT