265
பொத்துவில் வாழ் மக்களின் நலன் கருதி ஒழுங்கு செய்யப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாம் MBS Health Care Solutions மூக்குக்கண்ணாடி நிலைய முன்றலில் அண்மையில் நடைபெற்றது.
பொத்துவில் முன்பள்ளி அபிவிருத்தி ஒன்றியத்தின் சமூக சேவைப் பிரிவின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று MBS Health Care Solutions நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கண் பரிசோதனை முகாமில் பலர் கலந்துகொண்டு நன்மையடைந்தனர். இதன்போது, கண் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், மூக்குக்கண்ணாடியை பயன்படுத்த வேண்டிய தேவை உடையவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் மூக்குக்கண்ணாடியை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அட்டாளைச்சேனை குறூப் நிருபர்