Sunday, June 16, 2024
Home » கொவிட் உருமாற்றம் குறித்து சுகாதார அமைப்பு அக்கறை

கொவிட் உருமாற்றம் குறித்து சுகாதார அமைப்பு அக்கறை

by Gayan Abeykoon
December 21, 2023 1:04 pm 0 comment

கொவிட்–19 நோய்க்குக் காரணமாகும் உருமாற்றம் பெற்ற JN.1 வைரஸ் அக்கறைக்குரிய தொற்றாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. இப்போதைய ஆதாரங்களின்படி அந்த வைரஸால் பொதுச் சுகாதாரத்துக்கான ஆபத்து குறைவே என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.

தற்போது மக்களிடையே தொற்றிவரும் மற்ற வைரஸ்களை காட்டிலும் JN.1 ரக வைரஸால் மனித நோய் எதிர்ப்புமுறையை ஊடுருவி எளிதில் தொற்றமுடியும் என்று நிபுணர்கள் இருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

ஆனால் அது கடுமையான உடல்நலக் குறைவை ஏற்படுத்தும் அறிகுறிகள் இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றபோதும் அதனால் ஆபத்து அதிகமில்லை என்று நிபுணர்கள் கூறினர்.

வைரஸால் ஏற்படக்கூடிய கடும் உடல்நலக் குறைவு, மரணம் ஆகியவற்றிலிருந்து தற்போது நடப்பிலுள்ள தடுப்பு மருந்துகளால் பாதுகாப்பு வழங்கமுடியுமென உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

டிசம்பர் 8ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்காவில் நேர்ந்த கொவிட்–19 நோய்ச் சம்பவங்களில் 15 முதல் 29 வீதம் JN.1 ரக வைரஸால் ஏற்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT