84
சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாறு மதகுக்கு அருகில், பழைய ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, தேடுதல் நடத்தப்பட்டு இவை, மீட்கப்பட்டன.
T-56 துப்பாக்கிக்கான 22 தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் T-56 துப்பாக்கியின் ஒரு பகுதி ஆகியவையே மீட்கப்பட்டன.மீட்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.