Home » இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

by Rizwan Segu Mohideen
December 19, 2023 10:41 am 0 comment

இலங்கையின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 14 பேரை இலங்க கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (17) , காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட குறித்த மீன்பிடி படகு மற்றும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை காங்கேசந்துறை துறைமுகம் ஊடாக மயிலிட்டி மீன்பிடி விசாரணை அலுவலகத்தில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT