Friday, May 3, 2024
Home » மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரால் கல்விப் பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரால் கல்விப் பணி ஆரம்பம்

by Rizwan Segu Mohideen
December 5, 2023 5:27 pm 0 comment

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தின் இவ்வாண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு 232ஆவது இராணுவ படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கல்வி கருத்தரங்கானது இன்று ஆரம்பிக்கப்பட்டு 08ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம் பெறவுள்ளது.

மாணவர்களின் பாண்டு வாத்தியம் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியது.

இந் நிகழ்வானது 23ஆம் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமையில் கரடியனாறு மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று (O5) இடம் பெற்றது.

இப் படைப்பிரிவின் பிரிகேடியர் அசித்த புஸ்பகுமாரவின் எற்பாட்டில் உன்னிச்சை கெமுனுவொட்ச் பிரிவினரினால் எற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கு செயற்றிட்டத்தில் 5 பாடசாலைகள் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தும் நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரக்கு மேற்கொள்ளப்படுகின்றது.

இப் பாடசாலையில் வணிகப் பிரிவு மற்றும் கலைப்பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஐயங்களை தெளிவூட்டும் ஒரு சிறந்த களமாக அமையவுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிலத்த பிரேமரத்ன எதிர்காலத்தில் மாணவர்களிடையே கல்வி சார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதுடன் வெலி கந்தையில் உள்ள சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியையும், தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும் கற்பதற்கு வழிவகை செய்துள்ளதுடன், மேலும் இப் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்று இப் பாடசாலைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு கல்வி வலய பிரதி பணிப்பாளர் என். குகதாசன், பாடசாலையின் அதிபர் திருமதி சகிலா ஜெயக்குமார், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வி. ஜீவானந்தன், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவிகளினால் கண்கவர் நடனம் இடம் பெற்றதுடன் அதிதிகளினால் மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT