Monday, May 20, 2024
Home » இஸ்ரேலிய ஏற்றுமதிக்காக நெதர்லாந்து மீது வழக்கு

இஸ்ரேலிய ஏற்றுமதிக்காக நெதர்லாந்து மீது வழக்கு

by damith
December 3, 2023 1:07 pm 0 comment

எப்-–35 போர் விமானங்களின் பாகங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் காசாவில் இடம்பெறும் போர் குற்றங்களில் தொடர்புட்டிருப்பதாக நெதர்லாந்து அரசு மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்பாமின் நெதர்லாந்து கிளை உட்பட மூன்று மனித உரிமை குழுக்களே இந்த வழக்கை தொடுத்துள்ளன. இந்த விமானப்பாகங்களை அனுப்புவதன் மூலம் காசா மீது குண்டு போட நெதர்லாந்து அரசு உதவுவதாக அந்த உரிமைக் குழுக்கள் வாதிட்டுள்ளன.

காசாவில் போர் வெடித்த பின்னர் இஸ்ரேலிய எப்-–35 ஜெட்களுக்கு உதிரிப் பாகங்களை வழங்க நெதர்லாந்து அரசு ஒப்புதல் அளித்திருப்பது அரச பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் எப்-–35 விமானங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதான பதிவு இல்லை என்று நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சு இதற்கு பதிலளித்திருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT