331
பாகிஸ்தானில் நடைபெறும் தேசிய ரி20 கிண்ண தொடரில் துடுப்பெடுத்தாடும்போது பலஸ்தீன கொடியை காண்பித்ததற்காக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் அஸாம் கானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதம் விதித்துள்ளது.
லாஹுர் புளு அணிக்கு எதிரான போட்டியின்போது கராச்சி வைட் அணிக்காக ஆடும் அஸாம் கானின் துடுப்பில் ஒட்டப்பட்டிருந்த பலஸ்தீன கொடியை அகற்ற அவர் மறுத்துள்ளார்.
இதனால் நடுவரின் அறிவுறுத்தலை பின்பற்றாதது தொடர்பிலான பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதியை அவர் மீறி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிரடி துடுப்பாட்ட வீரராக அறியப்படும் அஸாம் பாகிஸ்தானுக்காக இதுவரை 5 ரி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.