கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றுக்கு அமைவாக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாம்பரம், சிவஞானம் சிறீதரன், வருண லியனகே, சம்பத் அதுகோரல, திஸகுட்டி ஆரச்சி, உதயகாந்த குணதிலக்க, குலசிங்கம் திலீபன், உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, எம். ராமேஷ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.