நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பெனாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவ்வமைச்சுப் பதவிகளில் இருந்து இன்றையதினம் ஜனாதிபதியினால் நீக்கப்பட்டிருந்தார்.
அவர் வகித்த அமைச்சுகளே இவ்வாறு பவித்ரா வன்னியாரச்சி மற்றும் ஹரீன் பெனாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரொஷான் ரணசிங்க இன்று (27) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். அதில் தான் கொலை செய்யப்படலாம் என குறிப்பிட்டதுடன், அவ்வாறு நடந்தால் அதற்கு ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்கவுமே காரணம் எனவும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.