Monday, May 20, 2024
Home » யூனியன் வங்கி கிரெடிட் கார்ட்களுடன் பண்டிகைக் காலத்தில் பெருமளவு சேமிப்பு

யூனியன் வங்கி கிரெடிட் கார்ட்களுடன் பண்டிகைக் காலத்தில் பெருமளவு சேமிப்பு

by sachintha
November 23, 2023 12:06 pm 0 comment

இந்த நத்தார் பண்டிகைக் காலப் பகுதியில், யூனியன் வங்கி கிரெடிட் கார்ட்களுடன் 200 க்கும் அதிகமான பொருட்கள், உணவகங்கள், விருந்தோம்பல் பகுதிகள், அத்தியாவசிய பொருட்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், மின்சாதனங்கள் மற்றும் பல விற்பனை நிலையங்களில் சொப்பிங் செய்து அதிகம் சேமிக்குமாறு யூனியன் வங்கி அழைத்துள்ளது.

புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களுக்கு 50% வரை விலைக்கழிவுகளுடன், 0% வட்டியில்லாத தவணை முறை மீளக் கொடுப்பனவு திட்டங்களை யூனியன் வங்கி கிரெடிட் கார்ட்கள் வழங்குவதுடன், அட்டைதாரர்களுக்கு இந்தப் பண்டிகைக் காலத்தில் சிறந்த சொப்பிங் மற்றும் விடுமுறை அனுபவங்களையும் வழங்கும்.

வாழ்க்கைமுறைக்கு பொருத்தமான கிரெடிட் கார்ட் என அறியப்படும் யூனியன் வங்கி கிரெடிட் கார்ட்கள் வழங்கும் பண்டிகைக் கால சலுகைகளில், அன்புக்குரியவர்களுக்கு பரிசளிப்பதற்கு பொருத்தமான பல அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. வீட்டுப் பாவனைப் பொருட்களுடன், சுப்பர் மார்க்கெட் சலுகைகளினூடாக பெருமளவு கவர்ச்சிகரமான சேமிப்புகள் நாட்டின் சகல முன்னணி சுப்பர் மார்க்கெட்களிலிருந்தும் வழங்கப்படுவதுடன், நத்தார் ஹம்பர்களுக்கு இலகு கொடுப்பனவு திட்டங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்களிலிருந்து வழங்கப்படும் பரந்தளவு விலைக்கழிவுகளினூடாக, அட்டைதாரர்களுக்கு தமது குடும்பத்தாருடன் சிறந்த விடுமுறையை அனுபவிக்க முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT