கந்தப்பளை- ஹைபொரஸ்ட் நகரில் காட்டெருமை தாக்கி 84 வயதான வயோதிபரொருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காட்டெருமை தாக்குதலுக்கு இலக்கானவர் ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தின் மூத்த பிரஜையான முனியன் கங்காணி என்பவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவு சிறிய நகருக்குள் காட்டெருமை ஒன்று திடீரென வந்துள்ளது. இதன்போது காட்டெருமையை விரட்டியடிக்க நகரில் சிலர் முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வயோதிபரான முனியன் கங்காணி நகரிலிருந்த கடையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த போது காட்டெருமையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
பலத்த காயங்களுக்குள்ளான அவரை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தீவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
(ஆ.ரமேஷ்)