501
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான இரசிகர்களைக் கொண்ட பிரபலமான ‘vlog’ படைப்பாளரான Nas Daily என அழைக்கப்படும் நுஸைர் யாசீன் (Nuseir Yassin), இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த அவர், நேற்றையதினம் (20) குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.
நேற்றையதினம் (20) BMICH இல் அவர் இலங்கை இரசிகர்களுடன் ஒரு ‘vlog’ வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.