306
உலக தொலைக்காட்சி தினம் (World Television day) இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ஆம் திகதியை உலக தொலைக்காட்சி தினமாக ஐ.நா கொண்டாடி வருகின்றது. இன்றைய உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் கருதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின்படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ஆம் திகதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.
இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.