“பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113 (2)இன் படி சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை மேலதிகமாக நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பாஅபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கிணங்க அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னியாரச்சி, கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, நாமல் ராஜபக்ஷ, மயந்த திசாநாயக்க மற்றும் ரோஹிணி குமாரி விஜேரத்ன ஆகியோர் அந்தக்குழுவுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை,“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின்113 (2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் வகையில் மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
அதற்கிணங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜானக வக்கும்புர, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார, எரான் விக்கிரமரத்ன, இசுரு தொடங்கொட, எம்.டப்ளியூ.டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் டீ. வீரசிங்க ஆகியோர் இந்த குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்