யாழ்.உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியை சேர்ந்த எஸ். பிரேமராஜன் (68) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் நபரே கொலைசெய்யப்பட்டவராவார்.
கைதானவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
யாழ். விசேட நிருபர்