காசாவில் அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசா தொடர்பில் இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட நான்கு தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையில் நிறைவேற்றப்பட்டிருக்கு இந்தத் தீர்மானத்தில் காசா பகுதிக்கு உதவி விநியோகங்களை அனுமதிப்பதற்கும் மருத்துவ உதவிக்காக மக்களை அப்புறப்படுத்துவதற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோல்டாவினால் கடந்த புதன்கிழமை (15) கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐக்கிய இராச்சியம் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டன.
இதில் போர் நிறுத்தம் ஒன்று பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதோடு ஹமாஸ் அமைப்புப் பற்றியும் எதுவும் கூறப்படவில்லை. இந்நிலையில் இந்தத் தீர்மானம் அர்த்தமற்றது மற்றும் யதார்த்தத்திற்கு புறம்பானது என்று ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் கிளாட் ஏர்டன் தெரிவித்துள்ளார்.