337
அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுப் கழகம் சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் அணியினரும், அக்கரைப்பற்று சம்பியன் அணியினரும் மோதினார்கள்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்