கிரிக்கெட் சபையின் ஊழல், மோசடிகளை வெளிப்படுத்த முயன்றதால் தமது உயிருக்கும் தம் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் கவனம் செலுத்தி தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
ஊழல், மோசடிகளை வெளிப்படுத்தியதால்,
தாம், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஷம்மி சில்வா,சுதத் சந்திரசேகர ஆகியோரின் கூற்றுக்களால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் சபாநாயகரை வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)