Sunday, September 8, 2024
Home » புதிய தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள் கையளிப்பு

புதிய தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள் கையளிப்பு

by sachintha
November 17, 2023 9:14 am 0 comment

நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் இன்று (17) வழங்கப்படவுள்ளன.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்,இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.2020 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 2,519 மாணவர்கள், தாதியர்களாக நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் 42,000 க்கும் அதிகமான தாதியர்கள் பணிபுரிகின்றனர்.குறித்த ஆட்சேர்ப்பின் மூலம் நாட்டில் தாதியர்களின் எண்ணிக்கை 45,000 ஆக அதிகரிக்கவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x