559
34ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நாளை (16) தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது.
இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இடம்பெறும் இந்த விளையாட்டு விழாவில் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
சாய்ந்தமருது விசேட நிருபர்