சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமும் உளநல தினமும் யாழ். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசெம்பர் 6ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, 15 பிரதேச செயலகங்களிலுள்ள மாற்றுத்திறனாளிக் கலைஞர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், சமூக சேவையாளர்கள் ஆகிய 300 பேர் கெளரவிக்கப்படவுள்ளனர்.
மாற்றுத்திறனாளிக் கலைஞர்களுக்கான கலாவிபூஷண விருது, சங்கவி பிலிம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டருடன் இணைந்து தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் வழங்கப்படவுள்ளது.
சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கான விருதை, யாழ். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு வழங்கவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், இனிய விருந்தினர்களாக தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், உளநல மருத்துவ நிபுணர் எஸ்.சிவதாசன், வடமாகாண சமூகசேவைத் திணைக்களப் பணிப்பாளர் அகல்யா செகராச, சங்கவி பிலிம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டர் பணிப்பாளர் கலாநிதி துரைராசா சுரேஸ், கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் சி.சிவகெங்காதரன், வடமாகாண கைத்தொழில் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், Crafttary பணிப்பாளர் தம்பிராசா சுரேஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.