Home » கட்டாக்காலி மாடுகளால் வீதி விபத்துகள் அதிகரிப்பு

கட்டாக்காலி மாடுகளால் வீதி விபத்துகள் அதிகரிப்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:00 am 0 comment

ம்பாறை மாவட்டத்தில் வீதிகளில் கவனிப்பற்று காணப்படும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான நகரங்களிலுள்ள வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், இரவு வேளைகளில் வீதி விபத்துகள் அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கட்டாக்காலி மாடுகள் விளையாட்டு மைதானம், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் போன்றவற்றை அசுத்தப்படுத்தி வருவதோடு மக்களுக்கு பெரும் அசௌகரிங்களை ஏற்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்கள் பொலிஸாருடன் இணைந்து கட்டாக்காலி மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, பிடிக்கப்படும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் ஒரு நாளைக்குள் உரிமைகோராத பட்சத்தில் நீதிமன்றத்தின் ஊடாக மாடுகளை அரச உடமையாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் தத்தமது மாடுகளை உரிய முறையில் பராமரிக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

(ஒலுவில் விசேட நிருபா்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT