இலங்கையிலுள்ள முன்னணி தனியார் கல்வி நிறுவனமான IDM Nations Campus International இன் வருடாந்த பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (11) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ( BMICH) நடைபெற்றது. இதன்போது 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பிரிட்டனிலுள்ள IDM International இன் கிளை நிறுவனமாக செயற்பட்டு வரும் IDM Nations Campus International, இலங்கையில் கல்வியினூடாக தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக IDM Nations Campus International உருவாக்கப்பட்டதுடன், தொழில் ரீதியான கல்வித் திட்டத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தையும் இந்தக் Campus கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். அத்துடன், ISO தரச் சான்று வழங்கப்பட்ட கல்வி நிறுவனமாகவும் IDM Nations Campus International உள்ளது. இலங்கையில் மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (முனைவர்) பட்டப் படிப்புகளை வழங்குவதற்காக பிரிட்டனிலுள்ள Buckingham shire New University மற்றும் மலேசியாவிலுள்ள Lincoln University College ஆகியவற்றுடன் IDM Nations Campus International இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
IDM Nations Campus International இன் வருடாந்த பட்டமளிப்பு விழா
182