429
காத்தான்குடி 6ம் குறிச்சி அல்ஹசனாத் வித்தியாலயத்திற்கு குடிநீர் இணைப்பு திட்டம் கடந்த வியாழக்கிழமை (02) ஆரம்பித்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது
மஸ்ஜிதுல் ஹசனாத் பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அவர்களின் நிதிப்பங்களிப்புடனும் இந்த குடி நீர்த்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஆரம்பித்து வைத்து கையளிக்கும் வைபவத்தில் பாடசாலை அதிபர் திருமதி கமால்டீன், மஸ்ஜிதுல் ஹசனாத் பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜெளபர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்