இன்று (11) காலை அஹுங்கல்ல பிரதேசத்தில் ரீவ் ஹோட்டல் அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நாபே, கொஸ்கெட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்துப் பகுதியில் காயமடைந்த குறித்த நபர் கொஸ்கெட சுஜீ என்பவருக்கு நெருங்கிய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்த வேளையில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதோடு, சந்தேகநபர்கள் காரில் வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பதோடு, அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.