மலேசியாவில் சூழ்ந்துள்ள மோசமான புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தோனேசியாவையும் இதர ஆசியான் நாடுகளையும் மலேசிய அதிகாரிகள் அணுகியுள்ளனர்.
அண்மைய நாட்களில் மலேசியக் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதற்கு அண்டை நாடான இந்தோனேசியாவில் எரியும் காட்டுத்தீ காரணம் என்று அவர்கள் குறைகூறினர்.
அதை மறுத்த இந்தோனேசியா, எல்லை தாண்டிச் சென்ற புகைமூட்டம் எதையும் கண்டறியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் எழும் புகைமூட்டத்தை வழக்கமானதாகக் கருதிவிட வேண்டாம் என்று மலேசியச் சுற்றுப்புற அமைச்சர் இந்தோனேசிய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மோசமடையும் அந்தப் போக்கிற்குத் தீர்வு காண்பதில் உதவும்படி ஆசியான் நாடுகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதிகரிக்கும் புகைமூட்டம் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் சுற்றுலாத் துறையையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தோனேசியாவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 270,000 ஹெக்டர் வனப்பரப்பு தீக்கிரையானது.