Monday, May 13, 2024
Home » கற்பித்தலிலும், இலக்கியத்திலும் சிறந்து விளங்கிய மருதமுனை ஆசிரியர் டீன் கபூர்

கற்பித்தலிலும், இலக்கியத்திலும் சிறந்து விளங்கிய மருதமுனை ஆசிரியர் டீன் கபூர்

by damith
October 2, 2023 1:08 pm 0 comment

தனது 31 வருட ஆசிரிய சேவையில் இருந்து மருதமுனை டீன் கபூர் அண்மையில் ஓய்வு பெற்றார். நல்லாசானாக இருந்து மாணவர்களை அரவணைத்து கற்பிக்கின்ற ஆற்றல் கொண்டவர் இவர். கவிஞனாக, ஓவியனாக தன்னை தடம் பதித்துக் கொண்டவர். சகலருடனும் நல்லுறவை பேணிவருகின்ற மனித நேயம் கொண்டவர். இலக்கியப் பரப்பில் அதிக நண்பர்களை தன்னகத்தே கொண்டவர். இவரது முகநூலில் இவர் வரைந்த சித்திரங்களையும், ஓவியங்களையும், கவிதைகளையும் பார்த்து ரசிக்கலாம்.

சக ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் அன்பாகப் பழகி தனது ஆசிரியப் பணியை சிறப்பாகச் செய்தவர். இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். அத்துடன் பாடசாலைகளில் நடைபெறுன்ற நிகழ்வுகளை அறிவிப்பாளராகத் தொகுத்து வழங்கியவர். பாடசாலைகளின் சுற்றுச்சூழுலை அழகுபடுத்துவதிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்ததிலும் இவரது பங்களிப்பு அதிகம். மருதமுனையைச் சேர்ந்த அப்துல் கபூர், காதர் பீபி தம்பதிக்கு மகனாக 1963-.07.-08 ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர் டீன் கபூர். மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர். சிறுவயதில் இருந்து இன்று வரை கலை, இலக்கியத் துறையில் தடம்பதித்து வருகின்றார். இதுவரை நான்கு கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 1992.05.15ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கடமையேற்று தனது ஆசிரியப் பணியை 2001 ஆம் ஆண்டு வரை முன்னெடுத்தார். அதன் பின்னர் பல பாடசாலைகளில் இடமாற்றம் பெற்று 2011ஆம் தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை மீண்டும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கடமையாற்றினார். 2019ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று நிந்தவூர் அஸ்-ஸபா வித்தியாலயத்தில் கடமையாற்றி சமீபத்தில் ஒய்வு பெற்றார்.

– பி.எம்.எம்.ஏ.காதர்- (மருதமுனை தினகரன் நிருபர்)-

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT