Wednesday, October 16, 2024
Home » வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சமாகியது
ரஷ்ய குடும்பத்தின் நேற்றைய வருகையுடன்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சமாகியது

by sachintha
September 27, 2023 7:16 am 0 comment

நாட்டுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நேற்று (26) ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையுடன் பத்து இலட்சமாக அதிகரித்தது.

ரஷ்ய பிரஜை ஒருவரும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்கும் முகமாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கு வந்த ரஷ்ய நாட்டவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். ரஷ்யாவிலிருந்து ஓமானுக்கு வந்த அவர்கள், பின்னர் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கேக் வெட்டி, மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.

(கட்டுநாயக்க நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x