Home » தேசிய தரக்கணிப்பில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை முதலிடம்

தேசிய தரக்கணிப்பில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை முதலிடம்

by Rizwan Segu Mohideen
September 21, 2023 12:11 pm 0 comment

சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட காயங்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பான முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்கின்ற சுகாதார நிறுவனங்களுக்கான தரக்கணிப்பீடுகளில் அமைச்சின் கண்காணிப்புகள் மற்றும் மேற்பார்வைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு தகுதி சான்றிதழ்களை நேற்றுமுன்தினம் (2023.09.19) கொழும்பு, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்றீடு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் வீ அல்விஸ், தேசிய தொற்றநோய் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சமித் டி சமரக்கோன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

தொற்றாநோய்ப் பிரிவின் தேசிய கண்காணிப்பு செயல்முறையின் கீழ் 2022 ஆம் ஆண்டின் மாவட்ட மற்றும் மாகாண நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட சிறந்த செயல்திறனுக்கான தேசிய மதிப்பாய்வு விருது வழங்கும் விழாவின் போது மேற்படி சிறந்த செயல்திறன் தகுதி சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

வெளிநோயாளர் முறைமையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்று பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அஸாத் எம் ஹனிபா சுகாதார அமைச்சின்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT