Sunday, May 19, 2024
Home » தேசிய மட்ட கிரிக்கெட்: அஸ்–ஸிறாஜ் சம்பியன்

தேசிய மட்ட கிரிக்கெட்: அஸ்–ஸிறாஜ் சம்பியன்

by sachintha
September 20, 2023 11:29 am 0 comment

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2023ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று அஸ்–ஸிறாஜ் மகா வித்தியாலயம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
27 பாடசாலை கிரிக்கெட் அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி அனுராதபுரம் சிறைச்சாலை விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்றது. இதில் புத்தளம் ஆனந்த கல்லூரி அணியையே அஸ்–ஸிறாஜ் அணி வீழ்த்தியது.
அஸ்–ஸிறாஜ் அணியின் பஹத் அஹமட் தொடர் நாயகனாக தெரிவானார்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT