Monday, May 20, 2024
Home » பாணந்துறை பிரதேசத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு

பாணந்துறை பிரதேசத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு

by sachintha
September 19, 2023 2:07 pm 0 comment

பாணந்துறை பிரதேச தமிழ்மொழிமூல பாடசாலைகளிலிருந்து அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் பாணந்துறை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பாணந்துறை செரன்டிப் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழகம் தெரிவான 2021 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான இந்நிகழ்வில் 31 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். பிரதம அதிதியாக முன்னாள் ஆசிரியை ரஸானா ஹஜ்ஜுல் அக்பர் கலந்து கொண்டார். பல்வகை சமூக செயல்பாட்டாளராக வழங்கிய பங்களிப்புக்காக அவர் விஷேட நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் சிறப்புரை நிகழ்த்தினார். கௌரவ அதிதிகளாக பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். அவர்கள் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.

ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் பாணந்துறை கிளையின் கல்வி மற்றும் உயர் கல்வி ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தின் பிரகாரம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாணந்துறை கோட்டக் கல்விப் பிரிவின் தமிழ் மொழிமூல பாடசாலைகளுடன் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிலியந்தலை கோட்ட மட்ட பாடசாலைகளிலிருந்தும் குறிப்பிட்ட ஆண்டில் பல்கலைக்கழகம் பிரவேசித்த மாணவர்கள் கலந்துகொண்ட,ர்.

பாணந்துறை மற்றும் பிலியந்தல கோட்டக் கல்விப் பிரிவின் பல்கலைக்கழகம் தெரிவான ஜீலான் தேசிய பாடசாலை -16, அல்பஹ்ரியா தேசிய பாடசாலை-09, அலவிய்யா முஸ்லிம் வித்தியாலயம்-02, அறபாத் முஸ்லிம் வித்தியாலயம்-04 என 31 மாணவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

எம்.எஸ்.எம்.முன்தஸிர்

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT