Monday, May 20, 2024
Home » புத்திஜீவிகளை நாட்டுக்கு வழங்கும் மருதானை புனித ஜோசப் கல்லூரி

புத்திஜீவிகளை நாட்டுக்கு வழங்கும் மருதானை புனித ஜோசப் கல்லூரி

by damith
September 18, 2023 10:02 am 0 comment

இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை நிலைநாட்டிய மருதானை புனித ஜோசப் கல்லூரி, கல்வி நவீனமயமாக்கலில் எப்போதும் முன்னோடியாகவும் புதுமைகளை உருவாக்கவும் தொடங்கப்பட்டதிலிருந்து அதிக புத்திஜீவிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கல்வியாளர்களை நாட்டிற்கு வழங்கியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் வெளிச்சத்தில், இக்கல்லூரி மாணவர்களை தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதில் பங்குதாரர்களாக மாற்றுவதற்கு பொருளாதார ரீதியாக முன்னேறும் சமகால உலகிற்கு ஏற்ற தொழில்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

ஒரு பொறுப்புள்ள கல்லூரியாக, புனித ஜோசப் கல்லூரி நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய உதவிக்கரம் நீட்டவும், இந்த இலக்கை அடைய தனது மாணவர்களைப் பபயன்படுத்துகின்ற ஓர் பாரிய பொறுப்பையும் கையேற்றுள்ளது.

புனித ஜோசப் கல்லூரி, தனது முன்மொழியப்பட்ட மற்றும் தொடரும் திட்டங்களின் முன்முயற்சியாக, தனது மாணவர்களை தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய உலகத்திற்கு ஏற்ற தொழில் வல்லுநர்களாக மாற்றவும், தொழிற் சந்தையும் கல்வி முறையும் ஒன்றோடொன்று இணைக்கப்படவில்லை என்ற தவறான எண்ணத்தைத் மாற்றுகின்ற ஓர் திட்டத்தைத் தற்போது தொடங்கியுள்ளது.

அத்தகைய சூழ்நிலையின் காரணமாக இணையாகப் பயணிப்பது வேலையின்மைக்கான சாத்தியக்கூறுகள் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கும். புனித ஜோசப் கல்லூரி புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் கல்வி முறைக்கு ஒரு புதிய முகமாற்றத்தை கொடுக்க பாடுபடுகிறது.

கல்லூரியானது தனது மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான திட்டத்தைத் தொடங்கியுள்ளது, அவர்களை தொழிற் சந்தைக்கு ஏற்ற தொழில்ரீதியாகத் தகுதியான நிபுணர்களாக மாற்றும் வகையில் பொருத்தமான ஸ்ட்ரீமைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு வருடமும் க.பொ.த (உ/த) மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்த கல்லூரி திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்க விழா அண்மையில் அதன் பொன்ஜீன் மண்டபத்தில் கல்லூரி அதிபர் அருட்தந்தை, டொக்டர் ரஞ்சித் அன்ட்ராடி தலைமையில் அன்மையில் நடைபெற்றது. புனித ஜோசப் கல்லூரியின் 99 ஆம் ஆண்டு பழைய குழுவின் தலைவர் சுரந்த பொரலஸ்ஸாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சிக் குழுவின் தலைவர் ஷெனால் கொலோன் உள்ளிட்ட ஷெனல் கொலோன், அதிகாரம்கே இஷார, ஸ்ரீமல் விக்கிரமசிங்க, தரிந்து சாமர குழுவினர் முக்கிய பங்கினை வகித்தனர். புனித ஜோசப் கல்லூரியில் சுமார் 450 மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT