Sunday, May 12, 2024
Home » சனல்- 4 காணொளி விவகாரம் விசாரணை செய்ய புதிய குழு

சனல்- 4 காணொளி விவகாரம் விசாரணை செய்ய புதிய குழு

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் S.I.இமாம் தலைமையில்

by gayan
September 16, 2023 6:00 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ‘சனல் -4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இந்த விசேட குழுவானது, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம்.ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோசா ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றத்தினால் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மனுக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நேற்று (15) நீதிமன்றத்தினால் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு

புவனேக அலுவிஹாரே தலைமையிலான 6 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன்பாக இது தொடர்பான ஆவணங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த மனுக்களை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT