Saturday, May 11, 2024
Home » பாகிஸ்தானை 228 ஓட்டங்களால் வென்ற இந்தியா (HIGHLIGHTS)

பாகிஸ்தானை 228 ஓட்டங்களால் வென்ற இந்தியா (HIGHLIGHTS)

- வேகமாக 13,000 ஓட்டங்கள் கடந்தார் கோலி

by Rizwan Segu Mohideen
September 12, 2023 9:19 am 0 comment

16ஆவது ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் (10) கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டி மழை காரணமாக நேற்றையதினம் தொடர்ந்த நிலையில் இந்திய அணி இந்த அபார வெற்றியை ஈட்டியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 24.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இடைவிடாத மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டிருந்த நேற்றையதினம் பிற்பகல் 4.40 மணிக்கு மீண்டும் இப்போட்டி ஆரம்பமானது.

ஆட்டமிழக்காது களத்தில் இருந்த விராட் கோலி மற்றும் கே.எல் ராஹுல் தொடர்ந்தும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், இந்திய அணியை 356 எனும் ஓட்டங்களை பெற வழி வகுத்தனர்.

அத்துடன், இந்த போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வேகமாக 13,000 ஆயிரம் ஓட்டங்களை கடந்த சாதனையை விராட் கோலி சாதனை படைத்தார். அவர் 98 ஒட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இந்த சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

அந்த வகையில் இப்போட்டியில் ஆட்டமிழக்காதுவிராட் கோலி 122 (94) ஓட்டங்களையும் கே.எல். ராஹுல் 111 (106) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 56 ஓட்டங்களையும், சுப்மன் கில் 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதற்கமைய, 357 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்கள் நிறையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவினர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பகார் ஷமான் உச்சபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இன்றையதினம் (12) இந்திய அணி இலங்கை அணியுடன் சுப்பர் 4 சுற்றின் 4ஆவது போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

India  (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
c Faheem Ashraf b Shadab Khan 56 49 77 6 4 114.28
c Agha Salman b Shaheen Shah Afridi 58 52 83 10 0 111.53
not out 122 94 147 9 3 129.78
not out 111 106 141 12 2 104.71
Extras (nb 1, w 8) 9
TOTAL 50 Ov (RR: 7.12) 356/2
Fall of wickets: 1-121 (Rohit Sharma, 16.4 ov), 2-123 (Shubman Gill, 17.5 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
10 0 79 1 7.90 27 11 1 1 0
9.2 1 53 0 5.67 32 6 1 1 0
10 0 74 0 7.40 24 9 1 0 1
5 0 27 0 5.40 18 2 0 2 0
10 1 71 1 7.10 24 4 4 0 0
5.4 0 52 0 9.17 10 5 2 0 0
Pakistan  (T: 357 runs from 50 ovs)
BATTING R B M 4s 6s SR
b Kuldeep Yadav 27 50 98 2 0 54.00
c Shubman Gill b Bumrah 9 18 23 1 0 50.00
b Pandya 10 24 29 2 0 41.66
c †Rahul b Thakur 2 5 6 0 0 40.00
lbw b Kuldeep Yadav 23 32 58 2 0 71.87
c & b Kuldeep Yadav 23 35 43 1 0 65.71
c Thakur b Kuldeep Yadav 6 10 11 0 0 60.00
b Kuldeep Yadav 4 12 17 0 0 33.33
not out 7 6 9 0 1 116.66
absent hurt
absent hurt
Extras (lb 3, w 14) 17
TOTAL 32 Ov (RR: 4.00) 128
Fall of wickets: 1-17 (Imam-ul-Haq, 4.2 ov), 2-43 (Babar Azam, 10.4 ov), 3-47 (Mohammad Rizwan, 11.4 ov), 4-77 (Fakhar Zaman, 19.2 ov), 5-96 (Agha Salman, 23.6 ov), 6-110 (Shadab Khan, 27.4 ov), 7-119 (Iftikhar Ahmed, 29.3 ov), 8-128 (Faheem Ashraf, 31.6 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
5 1 18 1 3.60 25 1 0 2 0
5 0 23 0 4.60 20 3 0 2 0
5 0 17 1 3.40 22 1 0 1 0
4 0 16 1 4.00 14 1 0 1 0
8 0 25 5 3.12 33 1 1 0 0
5 0 26 0 5.20 10 1 0 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT