Monday, May 20, 2024
Home » உக்ரைனுக்கு சர்ச்சைக்குரிய ‘யுரேனிய’ ஆயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா

உக்ரைனுக்கு சர்ச்சைக்குரிய ‘யுரேனிய’ ஆயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா

by sachintha
September 8, 2023 2:11 pm 0 comment

 

உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டொலருக்கு மேற்பட்ட அமெரிக்காவின் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளின் ஓர் அங்கமாக அந்நாட்டுக்கு சர்ச்சைக்குரிய ஆயுதங்களையும் வழங்கவுள்ளது.

இதில் டாங்கிகளையும் துளைக்கக் கூடிய ஷெல்களுடன் யு.எஸ் ஏபிரகாம் டாங்கிகளை வழங்கவிருப்பதற்கு ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது. இவை மெலிவுற்ற யுரேனியத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.

உக்ரைன் தலைநகர் கீவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த பாதுகாப்பு பொதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் உக்ரைனுக்கு வழங்கப்படவிருக்கும் 175 மில்லியன் டொலர் இராணுவ உபகரணங்களில் 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் ஷெல்களும் வழங்கப்படவுள்ளன. இவை அணு எரிபொருள் அல்லது ஆயுதங்களுக்காக இயற்கையாக நிகழும் யுரேனியத்தை செறிவூட்டும் செயற்பாட்டின் கழிவுப் பொருளான, மெலிவுற்ற யுரேனியத்தால் தயாரிக்கப்படுகின்றன.

வொசிங்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை கண்டித்திருப்பதோடு இந்த முடிவு “மனிதாபிமானமற்றது” என்றும் தெரிவித்துள்ளது. “பதில் தாக்குதல் என்று அழைக்கப்படும் உக்ரைன் இராணுத்தின் தோல்வியை ஏற்க மறுப்பதன் மூலம் அமெரிக்கா தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறது” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT