Home » இங்கிலாந்து அணியுடனான தொடரை வென்று சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி

இங்கிலாந்து அணியுடனான தொடரை வென்று சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி

- இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக கிரிக்கெட் தொடர் வெற்றி

by Rizwan Segu Mohideen
September 7, 2023 11:18 am 0 comment

– ஆசியாவிற்கு வெளியே முதலாவது சர்வதேச ரி20 தொடர் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெற்ற ரி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மகளிர் அணி இலங்கை பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

நேற்றைய தினம் (06) இங்கிலாந்தின் டேர்பியில் நடைபெற்ற கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இச்சாதனையை படைத்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இங்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணியால் 116 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

சமரி அத்தபத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 117 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தது.

துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் கடைசி 2 போட்டிகளையும் வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர் தொடரை 2-1 என வென்றுள்ளது.

இதன் மூலம் இலங்கை மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அத்துடன் ஆசியாவிற்கு வெளியே அவர்களது முதலாவது சர்வதேச ரி20 தொடர் வெற்றியும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் நாயகியாகவும் தொடரின் நாயகியாகவும் சமரி அத்தபத்து தெரிவானார்.

அவர் இத்தொடரில் 114 ஓட்டங்களை குவித்ததோடு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

England Women  (20 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
b Athapaththu 1 4 4 0 0 25.00
c Dilhari b Fernando 12 10 16 2 0 120.00
c Fernando b Kumari 3 9 9 0 0 33.33
c & b Ranaweera 14 16 29 2 0 87.50
lbw b Ranaweera 12 12 61 2 0 100.00
st †Sanjeewani b Dilhari 2 2 5 0 0 100.00
c Ranaweera b Fernando 9 11 18 1 0 81.81
b Prabodhani 34 26 35 4 0 130.76
c †Sanjeewani b Dilhari 0 4 3 0 0 0.00
b Prabodhani 13 12 17 1 0 108.33
not out 1 2 4 0 0 50.00
Extras (w 3) 3
TOTAL 18 Ov (RR: 5.77) 104
Fall of wickets: 1-6 (Danni Wyatt, 0.6 ov), 2-15 (Alice Capsey, 3.3 ov), 3-21 (Maia Bouchier, 4.1 ov), 4-41 (Amy Jones, 7.5 ov), 5-46 (Freya Kemp, 8.2 ov), 6-48 (Heather Knight, 9.2 ov), 7-65 (Danielle Gibson, 11.6 ov), 8-66 (Sarah Glenn, 12.5 ov), 9-99 (Issy Wong, 17.2 ov), 10-104 (Charlie Dean, 17.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
3 0 11 1 3.66 10 1 0 0 0
3 0 19 2 6.33 9 3 0 1 0
4 0 16 2 4.00 12 1 0 0 0
2 0 16 1 8.00 3 2 0 0 0
3 0 25 2 8.33 5 4 0 0 0
3 0 17 2 5.66 8 1 0 2 0
Sri Lanka Women  (T: 105 runs from 20 ovs)
BATTING R B M 4s 6s SR
c Cross b Capsey 55 31 40 8 2 177.41
c Dean b Gibson 1 4 7 0 0 25.00
not out 30 35 50 3 1 85.71
not out 18 15 15 4 0 120.00
Extras (nb 5, w 1) 6
TOTAL 13.2 Ov (RR: 8.25) 110/2
Fall of wickets: 1-10 (Anushka Sanjeewani, 1.3 ov), 2-79 (Chamari Athapaththu, 9.2 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
2.2 0 33 0 14.14 5 4 2 0 0
1 0 9 1 9.00 3 1 0 0 2
2 0 19 0 9.50 7 3 1 0 0
2 0 24 0 12.00 7 4 0 1 3
3 0 11 0 3.66 10 1 0 0 0
3 0 14 1 4.66 10 2 0 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT