Monday, May 20, 2024
Home » சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் திருநங்கை அறிமுகம்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் திருநங்கை அறிமுகம்

by sachintha
September 1, 2023 1:31 pm 0 comment

கனடாவின் டானியல் மக்காஹி முதல் திருநங்கை கிரிக்கெட் வீரராக உத்தியோகபூர்வ சர்வதேச கிரிக்கெட் பேட்டியில் விளையாடவுள்ளார்.

2024 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிகாண் தொடருக்கு மக்காஹி கனடா குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

29 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மக்காஹி ஆடவரில் இருந்து மகளிர் திருநங்கை வீரராவதற்கான சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 4 தொடக்கம் 11 ஆம் திகதி வரை லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் தகுதிகாண் தொடரில் அவர் ஆடவுள்ளார்.

எனினும் தடகளம், சைக்கிளோட்டம், நீச்சல் மற்றும் ரக்பி உட்பட மற்ற விளையாட்டுகளில் மகளிர் அணியில் திருநங்கைகளை இணைப்பது குறித்து பிரச்சினை இருந்துவரும் நிலையிலேயே மக்காஹி சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ளார்.

கடந்த 2020 பெப்ரவரியில் அவுஸ்திரேலியாவில் இருந்து கனடாவுக்கு குடியேறி இருக்கும் மக்காஹி 2020 நவம்பரில் ஒரு பெண்ணாக சமூக மாற்றத்தை பெற்று 2021 மே மாதத்தில் மருத்துவ ரீதியிலான பால் மாற்றத்தை ஆரம்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT