Saturday, May 11, 2024
Home » கொத்தலாவல பாதுகாப்பு பல்கலையில் பயின்ற முதலாவது விமானப்படை தளபதி கௌரவிப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலையில் பயின்ற முதலாவது விமானப்படை தளபதி கௌரவிப்பு

by Rizwan Segu Mohideen
August 31, 2023 10:22 am 0 comment

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயின்று வரலாற்றில் முதன் முதலாக விமானப்படைத் தளபதியாக வரலாறு படைத்த எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (29) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இராணுவ மற்றும் சிவில் அரசாங்க சேவைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்காக வழங்கப்படும் கௌரவமான ஹோல் ஒஃப் ஃபேம் (Hall of Fame) கௌரவிப்பாளர்களில் தற்போதைய விமானப்படைத் தளபதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

விமானப்படைத் தளபதி இதன்போது அங்கு அமைந்துள்ள போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி பயிலும் இளங்கலை மாணவர்களுக்கான விசேட விரிவுரையையும் நிகழ்த்தினார்.

பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த் பீரிஸை சந்தித்த விமானப்படைத் தளபதி சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கல்விசார் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

ஆர்.ஏ.டி.சோமதிலக்க ராஜபக்ஷ மற்றும் திருமதி.வி.பி.பிரேமாவதி ஆகியோரின் புதல்வரே எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆவார். மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் அவர் இரண்டாவது குழந்தையாவார். மூத்த சகோதரர் ஆர்.ஏ.எஸ். உதயங்க ராஜபக்ச என்பதோடு, ஆர்.ஏ.டி. ஜீவானி ராஜபக்ஷ அவரது இளைய சகோதரியாவார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தனது ஆரம்பக் கல்வியை கம்பஹா பண்டாரவத்த பராக்கிரம கல்லூரியில் ஆரம்பித்து, பின்னர் தனது ஆரம்பக் கல்வியை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் முடித்து, இடைநிலைக் கல்விக்காக கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் சிறந்த மாணவராக கல்வி பயின்றார்.

அதன் பின்னர், 1988 ஆம் ஆண்டு, பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு குழு இலக்கம் 06 இல் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முப்படைகளின் அதிகாரிகளில் இருந்து விமானிகளைத் தெரிவு செய்வதற்கான திறன் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், அனுராதபுரம் விமானப்படையின் அடிப்படை விமானப் பயிற்சிக்கான படைத் தளமான இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் கீழ் இல 33 விமான கெடட் அதிகாரி பாடநெறி மூலம் தனது ஆரம்ப விமான பயிற்சியை மேற்கொண்டார். , அங்கு அவர் சிறந்த விமான கேடட் அதிகாரியாக இருந்தார். அதன் பின்னர், 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்று இலங்கை விமானப்படையில் விமானியாகச் சேர்ந்தார்.

தனது சேவையின் போது,எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ​​மிகவும் திறமையான ஒரு போர் விமானியாக புகார PUCARA விமானத்தை செலுத்திய அவர் போக்குவரத்து விமானியாக CESSNA-150, Y-12 (Y-12) Avrokhmashetiti-260TP Bichicraft-200T AN 32 (Antono-32) மற்றும் C-130 ஆகிய விமானங்களையும் செலுத்தியுள்ளார்.

இலங்கை விமானப்படையில் விமானி ஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த பதவியான மாஸ்டர் கிரீன் பட்டத்தை பெற்றுள்ள எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, சிவில் விமான போக்குவரத்து உரிமம் மற்றும் வணிக விமானப் போக்குவரத்து பைலட் உரிமம் (ATPL) என்பவற்றை வைத்திருப்பவர்.ஆவர் அவர் 7000க்கும் மேற்பட்ட மணிநேரம் விமானத்தில் விமானியாக பயணம் செய்த அனுபவம் கொண்டவராவார்.

1997 ஆம் ஆண்டு புகாரா விமானத்தின் மூலம் இரவு நேர தாக்குதலை நிகழ்த்தி தன்னை ஒரு தலை சிறந்த விமானியாக நிரூபித்தார் இதன் மூலம் அவசர சூழ்நிலையை சிறப்பாக கையாண்டமைக்காக பல்வேறு பாராட்டுகளையும் பெற்றார் இதன் மூலம் மாட்டின் பேக்கர் விமான நிறுவனத்தினால் கௌரவமான அங்கீகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவருடைய சேவை காலத்தில் பங்களாதேஷ் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி கல்லூரியில் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சி நெறியையும், பாகிஸ்தானில் விமான பாதுகாப்பு பயிற்சியினையும், ஐக்கிய அமெரிக்காவில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு பயிற்சியினையும் நிறைவு செய்த அவர் கல்வித்துறையில் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் பாதுகாப்பு ஆய்வுகளில் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றார் மேலும் அமெரிக்காவில் உள்ள அலபமா வான் பல்கலைக்கழகத்தில் இராணுவ அறிவியல் முதுகலை பட்டமும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய முதுகலை பட்டமும் “இதில் முதன்மை சித்தியும்” பெற்றார். அமெரிக்காவின் புகழ் பெற்ற அலாபமா விமானப்படை வான் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பழைய மாணவரும் psc ஆவார். அவர் ஐக்கிய ராஜ்யத்தின் ராயல் பாதுகாப்புக் கல்வி கல்லூரியில் சிறப்பு சர்வதேச பாதுகாப்பு கல்வி மற்றும் யுக்தி பயிற்சி நெறி இணையும் நிறைவு செய்துள்ளார்.

மேலும் அவருடைய சேவைக்காக மதிப்புமிக்க “ரணசூர பதக்கம்” மூன்று முறை பெற்றார் அத்தோடு” விசிட்ட சேவா விபூஷன “, பதக்கம் உத்தம சேவா “பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவுடைய சேவை காலத்தில் பொறிக்கப்பட்ட நியமனங்களாக 2011 முதல் 2012 வரை ஹிங்குராங்கொட விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார். 2012 முதல் 2014 வரை ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மதிப்புமிக்க இலங்கை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதன் மூலம் தனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார். ரஷ்யாவில் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சிரேஷ்ட விமானப் பணியாளர் அதிகாரியாக (SASO) நியமிக்கப்பட்டார். அதற்கு பின்னர் 2015 செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் வவுனியா விமானப்படை தளத்த்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், அவர் 2016 செப்டம்பர் 12 ம் திகதி முதல் 2017 ஆகஸ்ட் 23ம் திகதி வரையிலும், 2018 ஆகஸ்ட் 07ம் திகதி முதல் 2019 ஜூன் 30ம் திகதி வரையிலும் விமானச் செயலாளராகவும் கடமையாற்றினார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக் 2020ஆம் ஆண்டு சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தின் அகடமியின் கட்டளை அதிகாரியாக தளபதியாக நியமிக்கப்பட்டார் மேலும் கிழக்கு வான் கட்டளை தளபதியாகவும் நியமனம் பெற்றார். பின்னர் அவர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது பணிக்காலத்தில் கட்டளை அதிகாரியாகவும் தெற்கு வான் கட்டளை மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் தளபதி ( வான் பாதுகாப்பு ) ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் விமானப்படை தலைமயக்கத்தில் வான் செயற்பாட்டு பணிப்பாளராகவும் பின்னர் விமானப்படை தலைமை தளபதியாகவும் பணிவகித்தார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் இராணுவ சாதனைக்கு அப்பால் ஒரு விளையாட்டு வீரராக தன்னை பலமுறை நிரூபித்துள்ளார் அந்த வகையில் அவர் டேபிள் டெனிஸ், டெனிஸ் மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர் விமானப்படையின் சிறந்த தடகள வீரராகவும் செயற்பட்டுள்ளார். அவருக்கு விமானப்படை சிறந்த கோல்ப் மற்றும் டெனிஸ் வீரருக்கான விருதும் கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT