Tuesday, May 21, 2024
Home » யாழ். மத்தியை வென்றது ஏறாவூர் அலிகார் மத்தி

யாழ். மத்தியை வென்றது ஏறாவூர் அலிகார் மத்தி

by sachintha
August 24, 2023 2:19 pm 0 comment

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணி 6–4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (22) பி குழுவுக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்டபோதும் அலிகார் மத்தி அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன்மூலம் முதல் பாதியில் 3–2 என முன்னிலை பெற்ற அலிகார் அணி இரண்டாவது பாதியில் எதிரணிக்கு இரண்டு கோல்களை விட்டுக் கொடுத்த நிலையில் மேலும் மூன்று கோல்களை பெற்று வெற்றியீட்டியது.

அலிகார் மத்திய கல்லூரி இந்தத் தொடரில் ஆடும் இரண்டாவது போட்டி இதுவாகும். அந்த அணி முதல் போட்டியில் கொழும்பு சாஹிரா கல்லூரியிடும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT