Monday, May 20, 2024
Home » லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ‘Little Hearts’ திட்டத்தை பார்வையிட சென்ற இலங்கை அணி வீரர்கள்

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ‘Little Hearts’ திட்டத்தை பார்வையிட சென்ற இலங்கை அணி வீரர்கள்

- கடந்த வாரம் ரூ. 100 மில்லியன் நிதி உதவி

by Rizwan Segu Mohideen
August 24, 2023 5:46 pm 0 comment

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் பயிற்சியாளர்கள், அணி நிர்வார்க உத்தியோத்தர்கள் ஆகியோர் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (24) காலை விஜயமொன்றை மேற்கொண்டு இருந்தனர்.

இதன் போது, இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவு மற்றும் இதய-தொராஸிக் பிரிவு (Cardio-thoracic) ஆகியவற்றை பார்வையிட்டிருந்தனர்.

அவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் கலாநிதி ஜி. விஜேசூரிய மற்றும் லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி துமிந்த சமரசிங்க ஆகியோரால் வரவேற்கப்பட்டதோடு ‘லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தின்’ தற்போதைய பணிகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளால் வீரர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கடந்த வாரம் இலங்கை கிரிக்கட் சபை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மு. இஷ்ரத் இம்தியாஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT