Home » தான் உயிருடன் இருப்பதாக ஹீத் ஸ்ட்ரீக் அறிவிப்பு

தான் உயிருடன் இருப்பதாக ஹீத் ஸ்ட்ரீக் அறிவிப்பு

- இறந்ததாக கவலை வெளியிட்ட ஹென்றி ஒலங்காவே உயிருடன் இருப்பதையும் உறுதிப்படுத்தினார்

by Rizwan Segu Mohideen
August 23, 2023 12:19 pm 0 comment

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீத் ஸ்ட்ரீக் மரணித்ததாக தெரிவிக்க்பபட்ட நிலையில், சிம்பாப்பே அணியின் முன்னாள் வீரரான ஹென்றி ஒலங்காவும் தனது ட்விட்டர் கணக்கில் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார்.

 

பின்னர் அதனை நீக்கியுள்ள அவர், ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருப்பதாக தெரிவித்து, அவருடனான WhatsApp சம்பாஷணையை இணைந்து, இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் நையாண்டி செய்து மற்றுமொரு பதிவை இட்டுள்ளார்.

“ஹீத் ஸ்ட்ரீக்கின் மரணம் குறித்த வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் இது பற்றி கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் முழுமையாக உயிருடன் உள்ளார்.” என்று ஒலங்கா தெரிவித்துள்ளார்.

செய்தியை கேட்ட பெருமளவான கிரிக்கெட் வீரர்கள் அவரது மறைவு தொடர்பில் வருத்தம் தெரிவித்து பதிவிட்ட நிலையில் அதனை தற்போது நீக்கியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹீத் ஸ்ட்ரீக், “இது முழுக்க முழுக்க வதந்தி மற்றும் பொய்யான தகவலாகும். நான் உயிருடன் இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன், ஒரு பெரிய விடயத்தை, சிறிய விடயம் போன்று யாரோ ஒருவர் கடந்து செல்வது போன்று சரிபார்க்கப்படாமல் செய்திகளை பரப்புகின்றனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அந்த தகவலை முதலில் வழங்கியவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த செய்தியால் செய்தியால் நான் புண்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் ஹீத் ஸ்ட்ரீக்கின் உடல்நிலை கடந்த மே மாதத்தில் மோசமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2,000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சிம்பாப்வேயின் ஒரே வீரராக ஸ்ட்ரீக் இன்று வரை இருந்து வருகிறார்.

சிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் 4,933 ஓட்டங்களையும், 455 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT