Tuesday, May 21, 2024
Home » கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஸ்மார்ட் பலகை திறப்பு விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஸ்மார்ட் பலகை திறப்பு விழா

by sachintha
August 18, 2023 5:12 pm 0 comment

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக IMHO மற்றும் Ratnam foundation நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட திறன்பலகை வகுப்பறைத் திறப்பு விழா கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இசுறுபாய கல்வி அமைச்சின் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான பணிப்பாளர் திருமதி B.G.I களனி ஹேமாலி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கல்வி அமைச்சின் முன்னாள் செயல்திட்டப் பணிப்பாளர் காரை கந்தையா பத்மானந்தன் மற்றும் கலாசாலையின் 52/53 காலப்பகுதியில் கல்வி பயின்ற முன்னாள் ஆசிரியை திருமதி கந்தையா பராசக்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

திறன் வகுப்பறை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரிய மாணவி திருமதி ஸ்ரீ ஷோபனா சிவரூபன் திறன்பலகையில் e-கல்வியைப் பயன்படுத்தி கற்பித்தல் முறை ஒன்றினை மேற்கொண்டு காட்டினார்.

அதனைத் தொடர்ந்து ரதி லட்சுமி மண்டபத்தில் விருந்தினர்கள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

திறன்பலகையை கலாசாலைக்காக உவந்தளித்த IMHO, ரட்ணம் பவுண்டேசன் ஆகிய நிறுவனங்களுக்கும் இதற்குரிய இணைப்பினை மேற்கொண்ட அமெரிக்க பேராசிரியர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நிபுணர் தவம் மற்றும் IMHO இணைப்பாளர் முன்னாள் வலயக் கல்வி பணிப்பாளர் சு. கிருஷ்ணகுமார் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT